கோவில் பற்றி ஜோதிகாவின் பேச்சுக்கு எழுந்த விமர்சனம்... மனைவிக்காக ஆதரவாக சூர்யா பதிலடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகை ஜோதிகா கோவில்களை பராமரிக்க செலவு செய்கிறோம், ஆனால் மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கோவில்களைப் போல் மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் முறையாக பரமாரிக்கப்படவேண்டும் என்பது போல் பேசினார்.

ஜோதிகாவின் பேச்சுக்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பின. மேலும், ஜோதிகாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதங்களை ஏற்படுத்தின. பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எப்போதோ ஜோதிகா பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. 'கோவில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும்' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.

மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நண்பர்கள் , நல்லோர்கள் எங்கள் துணை நிற்கிறார்கள் .

முகம் தெரியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பில் பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையை கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Suriya issues statement on Jyotika's temple controversy | கோவில் பற்றி ஜோதிகா பேச்சு விமர்சனத்துகுள்ளானது குறித்து சூர்யா அறிக

People looking for online information on Jyothika, Suriya, Temple will find this news story useful.