சூர்யா 39 - மீண்டும் சிங்கம் காம்போ.. தெறி மாஸ் டைட்டில் ! படக்குழுவின் சர்ப்ரைஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் 39-வது படத்தின் தலைப்புடன் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் ரீலிஸ் தேதி உள்ளிட்ட தகவல் வெளியானது.

சூர்யா ஹரி இணையும் திரைப்படம் பெயர் இதுதான் | Suriya Hari's Suriya 39 titled as aruvaa

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடித்த அயன், சிங்கம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. தற்போது சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சம்மருக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சூர்யாவின் அடுத்த படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 39-வது படமான இதை ஹரி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளர் இமான், ஹரி-சூர்யா கூட்டணியுடன் இணைகிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யா ஹரி இணையும் திரைப்படம் பெயர் இதுதான் | Suriya Hari's Suriya 39 titled as aruvaa

People looking for online information on Aruvaa, Hari, Suriya, Suriya39 will find this news story useful.