மக்கள் பலரும் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருகிவரும் கொரோனா இரண்டாவது அலை பரவும் விதத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளுள் ஒன்றாக ஊரடங்கு என்பது நாட்டில் அத்தியாவசியமாகிறது.
எனினும் இந்த தவிர்க்க முடியாத சூழலில் வாழ்க்கையை வாழ்வதற்கான தினசரி பொருளாதாரத்தையும் தாண்டி கொரோனாவில் இருந்து தப்பி நலமுடன் இருக்க வேண்டியுள்ளது. எனவே மக்களை பெருந்தொற்றில் இருந்து காக்கும் விதமாக தொடர்ச்சியாக ஒரு வருட காலமாக ஊரடங்கும் பொதுமுடக்கமும் அடுத்தடுத்து முழுமையாகவும் தளர்வுகளுடனும் அமல்படுத்தப்பட்டு வந்தன.
எனினும் பலரும் இந்த கொரோனா கால சூழலால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமது மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா ரூ.5000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கில் நடிகர் சூர்யா பணம் செலுத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே தமிழ்நாட்டு முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் முதல்வரை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி அளித்தனர்.
நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கிறார். தவிர, கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நவரசா திரைப்படம் ஆகஸ்டு மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 9 இயக்குநர்கள் எடுத்த 9 ஆந்தாலஜி தொகுப்பு படம் நவரசா என்பது குறிப்பிடத் தக்கது.
ALSO READ: வெற்றிமாறனின் 'விடுதலை'.. தனுஷின் 'D43' படங்களின் ஆடியோ உரிமம் தொடர்பாக மாஸ் அப்டேட்!