www.garudavega.com

சூர்யா - பாலா இணையும் படம்.. உலகப்புகழ் பெற்ற இடத்தில் படப்பிடிப்பு! வெளியான கிளாசிக் BTS போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

Suriya Bala New Movie Kanniyakumari BTS Image goes Viral

5 நாளைக்கு 24 மணி நேரமும் 'Beast' படத்தை திரையிடும் தமிழக தியேட்டர்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது  பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் மார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா      உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

Suriya Bala New Movie Kanniyakumari BTS Image goes Viral

டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ அறிமுகமாகிறார். இவர் சூப்பர் சரண்யா, கோகோ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 2017ல் வேணுகோபாலின் சர்வோபரி பாலக்கரன் படத்தில் அறிமுகமானார். ஆபரேஷன் ஜாவாவில் (2021) அல்போன்சாவாகவும், கோ கோவில் (2021) அஞ்சுவாகவும், சூப்பர் ஷரண்யாவில் (2022) சோனாவாகவும் நடித்து புகழ் பெற்றார்.

Suriya Bala New Movie Kanniyakumari BTS Image goes Viral

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா திருவள்ளுவர் சிலையை பார்ப்பது போல புகைப்படம் அமைந்துள்ளது.

Suriya Bala New Movie Kanniyakumari BTS Image goes Viral

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர்  சதீஷ் சூர்யா

KGF ரசிகரோ .. Beast ரசிகரோ.. 'சிட்தி' பட விழாவில் ஆரி, சினேகன் பேச்சு..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Bala New Movie Kanniyakumari BTS Image goes Viral

People looking for online information on Bala, Kanniyakumari BTS Image, Suriya, Suriya 41, Suriya Bala New Movie will find this news story useful.