இன்று இயக்குனர் பாலாவின் 56வது பிறந்ந்தநாளை முன்னிட்டு சூர்யா 41 படத்தின் முதல் லுக் போஸ்டரும், தலைப்பும் வெளியாகி உள்ளது.
கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. பின்னர் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான வர்மா திரைப்படத்தை இயக்கினார்.
பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நந்தா', 'பிதாமகன்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும்.
கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
இப்படத்திற்கு தமிழில் வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் 'அச்சாலுடு' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநராக மாயப்பாண்டியும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.