நேற்று அரக்கர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் இடையேயான டாஸ்க் பிக்பாஸ் கொளுத்தி போடாமலேயே பற்றி எரிந்தது. சுரேஷ் தன்னை தலையில் அடித்து விட்டார் என சனம் பஞ்சாயத்தை கூட்ட கடைசியில் அர்ச்சனா, சுரேஷ் அழைத்து சனமிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். தான் செய்தது தவறு என உணர்ந்தததாலோ என்னவோ மீண்டும், மீண்டும் மன்னிப்பு கேட்டு பிக்பாஸிடம் கன்பெக்ஷன் ரூம் சென்று சுரேஷ் பேசினார்.
தான் செய்தது தவறு எனவும் தன்னை வீட்டைவிட்டு அனுப்பி வைக்குமாறும் சுரேஷ் கோரிக்கை வைக்க, பதிலுக்கு பிக்பாஸ் நீங்கள் மனதார மன்னிப்பு கேட்டீர்களா? என சிலபல கேள்விகள் கேட்டு சுரேஷிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார். சுரேஷ் அழுதது பிக்பாஸிற்கும் கஷ்டமாக இருந்ததா? என தெரியவில்லை. நீங்கள் இருவரும் உங்களுக்குள் பேசி இந்த பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள் என கூறிவிட்டார். ஆனாலும் சுரேஷின் மனம் ஆறவில்லை போல.
வெளிய மட்டும் வந்துடாதீங்க.. 😭😭😭 #SureshChakravarthy #BiggBossTamil4
— Kapilan Sachchithananthan (@iamkapilan) October 21, 2020
இதனால் இந்த பஞ்சாயத்து இன்று மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி கமல் முன்னிலையிலும் இந்த பிரச்சினை விவாதிக்கப்படலாம். சனம்-பாலாஜி விவகாரத்தில் கமல், சனத்திற்கு ஆதரவாக பேசியது போல மீண்டும் சனமிற்கு ஆதரவு தருவாரா? இல்லை இருவரையும் சமாதானம் செய்து வைப்பாரா? என்பது தெரியவில்லை. அதே நேரம் சுரேஷ் தன்னை வெளியில் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்ததால் அவர் வெளியில் சென்று விடுவாரா? என்று ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர்.
வேறு சிலரோ சுரேஷ் ஒரு வலிமையான போட்டியாளர் கண்டிப்பாக அவர் நீண்ட நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடிப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!