சென்னை, 10 டிசம்பர் 2021 : பிரபல தமிழ் டிவி சேனலான கலர்ஸ் தமிழ், இந்த வாரம் டான்ஸையும், ஸ்டைலையும் சேர்த்து வழங்குகிறது.
ஆம், விம் பிராண்டின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் மற்றும் சிறப்பு பார்ட்னராக நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் ப்ரோ இணைந்திருக்கிற டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 நிகழ்வில் இந்த வார ரஜினி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் மகத்துவத்தை போட்டியாளர்கள் நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குநர் பிருந்தா நடுவர்களாக பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, கலர்ஸ் தமிழில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Superstar Rajinikanth Birthday : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை நடன மற்றும் இசையோடு சேர்ந்து ஸ்டைலாக போட்டியாளர்கள் கொண்டாடி மகிழ்வதை 2021 டிசம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் கண்டுகளிக்க முடியும்.
மேலும் இந்த வார எபிசோடில் புதிய தொகுப்பாளியாக தமிழக மக்கள் அனைவரும் அறிந்த பிரபல தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் இணைகிறார். இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் சிவாவை வருகை தருகிறார். ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்ட இயக்குநர் சிவா தமிழில் அஜீத், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக பேட்டை திரைப்படத்திலிருந்து “மாஸ் மரணம்” திரைப்பாடலுக்கு நடிகர் ஷாம் குழுவைச் சேர்ந்த அய்சு-அல்ஹேனா நடனமாடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடன அமைப்பாளரின் ஶ்ரீதர் குழுவைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தியாகு ஆகியோர் ரஜினிகாந்த்தின், ‘அண்ணாமலை’ திரைப்படத்திலிருந்து “வந்தேண்டா பால் காரன்” பாடலுக்கும் மற்றும் அதைத் தொடர்ந்து “கொண்டையில் தாழம்பூ” பாடலுக்கு நடிகை குஷ்புவுடன் சேர்ந்து சாண்டியும் நந்திகாவும் நடனமாடி கலக்கவிருக்கின்றனர்.
இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோடில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பங்கேற்கிறார். நடிகை அபிராமியின் குழுவைச் சேர்ந்த அபிராஜ் மற்றும் அஞ்சனா ஆகியோர், ‘படையப்பா’ திரைப்படத்திலிருந்து "சுத்தி சுத்தி வந்தீக" பாடலுக்கும், நடிகை இனியாவின் குழுவைச் சேர்ந்த பிருத்வி மற்றும் தியன் ஆகியோர் பாஷா திரைப்படத்திலிருந்து "நான் ஆட்டோகாரன்" பாடலுக்கும் நடனமாடவிருக்கின்றனர்.
தொகுப்பாளினி பாவனா கிளாசிக்கல் நடனம் ஆடுவதையும், தங்க மகனின் "பூ மாலை" பாடலுக்கு நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பூ ஆகியோர் நடனம் ஆடுவதையும் பார்வையாளர்கள் டான்ஸ் vs. டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் காணமுடியும்.