மருத்துவமனையில் போராடிய ரசிகருக்காக நடிகர் ரஜினிகாந்த் எமோஷனலாக ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆல்டைம் சூப்பர்ஸ்டராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ரஜினியின் ரசிகரான முரளி என்பவர், சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்'' என உருக்கமாக பதிவிட்டார்.
இதையடுத்து நடிகர் ரஜினி அவருக்காக எமோஷனலாக பேசிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாக இருங்கள். நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமாகி நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீர்கள். குணமடைந்து வந்த பிறகு, கண்டிப்பாக வீட்டுக்கு குடும்பத்துடன் வாருங்கள். நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்'' என அவர் எமோஷனலாக பேசியுள்ளார்.
இதை தொடர்ந்து, முரளி வெளியிட்டுள்ள ரீசன்ட் பதிவில் கூறியதாவது, ''ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.
@rajinikanth ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி 🙏. @mayavarathaan @imravee 👇🏿 pic.twitter.com/G9iYKBxKgZ
— Darshan (@Darshan47001815) September 17, 2020