சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படம் (12.05.2022) முதல் தியேட்டரில் வெளியாகியுள்ளது.
'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குனராகவும் பணிபுரிந்தனர்.
இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 'சர்க்காரு வாரி பாட்டா', படத்தின் மையக் கதை பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக ஹீரோ களமிறங்கி ஆக்ஷனில் இறங்குவதை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இப்படம் AP, TS இல் முதல் நாளில் 36.89 கோடி (SHARE) வசூல் செய்துள்ளது. இது பெரிய சாதனையாகும். நிஜாம் பகுதியில் 12.24 கோடியும், சீடெட் - 4.7 Cr, UA பகுதி - 3.73 Cr, கிழக்கு கோதாவரி - 3.25 கோடி, மேற்கு கோதாவரி - 3 Cr, குண்டூர் - 5.83 கோடி, கிருஷ்ணா - 2.58 கோடி, நெல்லூர் - 1.56 கோடி என மொத்த Share : 36.89 Cr ஆகும்.
இப்படம் முதல் இரண்டு நாட்களில் உலகளவில் 103 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் இப்படம் 48.27 கோடியை வசூலித்த நிலையில், அமெரிக்காவில் ஏற்கனவே 1.5 மில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது.
படத்தின் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மே 16 ஆம் தேதி விஜயவாடாவில் நடக்கின்றன. மகேஷ் பாபு மற்றும் முழு குழுவினரும் இந்த நிகழ்விற்கு வருவார்கள்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8