`சர்காரு வாரி பாட்டா' படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங் தற்போது மீண்டும் துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்தப் படத்தில் மகேஷ்பாபு பேங்க் மேனஜராகவும், கீர்த்தி சுரேஷ் அவரது உதவியாளராகவும் நடிக்கிறார்கள். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை அடுத்தாண்டு (2022) மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை இன்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதில் "சர்காரு வாரி பாட்டா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 31-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Witness our SuperStar in never seen before avatar 💥#SVPFirstNotice on July 31st 🔔#SarkaruVaariPaata
Super 🌟 @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @GMBents @14ReelsPlus @SVPTheFilm pic.twitter.com/fwEEZv8AnY
— Mythri Movie Makers (@MythriOfficial) July 29, 2021