உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இந்த நேரத்தில் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க பெரும் பங்காற்றுபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தான். இதனால் அவர்களுக்கு அதிக மன உளைச்சலும், பயமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இன்று சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் அவர்களை செல்போனில் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமீரகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் விதத்தில் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களின் நம்பர்கள் சேகரிக்கப்பட்டது.
அவைகளை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலிடம் கொடுத்தனர். நடிகர் மோகன்லால் அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். மேலும் அவர் 'நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள்" என்று கூறி பாராட்டினார். இதனை கேட்ட செவிலியர்கள் ஒரு நிமிடம் செய்வதறியாது திக்குமுக்காடிப் போனார்கள். இந்த செய்தி தற்போது வெளிநாட்டு ஊடகங்களில் வைரலாகி வருகிறது.