www.garudavega.com

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகளுடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Super Star Rajinikanth Visit Tirupati Balaji Temple with Aishwarya Rajinikanth

Also Read | பிரசித்தி பெற்ற அமீன் பீர் தர்ஹாவில் வழிபாடு செய்த ரஜினிகாந்த் & A.R. ரஹ்மான்.. வைரல் PHOTOS!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

Super Star Rajinikanth Visit Tirupati Balaji Temple with Aishwarya Rajinikanth

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Super Star Rajinikanth Visit Tirupati Balaji Temple with Aishwarya Rajinikanth

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

Super Star Rajinikanth Visit Tirupati Balaji Temple with Aishwarya Rajinikanth

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Super Star Rajinikanth Visit Tirupati Balaji Temple with Aishwarya Rajinikanth

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "ஆறு வருடங்கள் கழித்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்திருக்கிறேன். இந்த புனித அனுபவத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியாது" என கூறியுள்ளார்.

Also Read | பிரபல தமிழ் சீரியல் நடிகை தேஜஸ்வினி திருமணம்.. மாப்பிள்ளை இவரா? வைரல் போட்டோஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Visit Tirupati Balaji Temple with Aishwarya Rajinikanth

People looking for online information on Aishwarya Rajinikanth, Rajinikanth, Super Star Rajinikanth, Tirupati Balaji Temple will find this news story useful.