பாபா படத்தின் ரீ ரிலீஸ் வெற்றிக்கு, ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு நினைவு பரிசளித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | புது வீட்டில் தனுஷ்.. தனது ரசிகர்களை குடும்பத்துடன் வரவழைத்து சந்திப்பு! நெகிழ்ச்சியான PHOTOS
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா.
அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
சமீபத்தில் இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆனது. இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டு, சில வசனங்கள் சேர்க்கப்பட்டு வண்ணக் கலவை மாற்றப்பட்டு ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் இந்த படம் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, தமது டிவிட்டர் பக்கத்தில், "ரீ-ரிலீஸ் படங்களிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்த பாபா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்." என சுரேஷ் கிருஷ்ணா ட்வீட் செய்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடமிருந்து நினைவு பரிசு பெற்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Following the massive success of the re-release of Baba, that made history with record collections among re-release films, Rajnikanth presented the technicians with a memento . pic.twitter.com/KOPaQrXP5W
— sureshkrissna (@Suresh_Krissna) February 20, 2023
Also Read | அரசியலுக்கு வருவீங்களா?.. ரசிகரின் பரபரப்பு கேள்வி.. கங்கனா ரனாவத் அளித்த பதில்!