சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது
இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நிற்ய்வனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்தனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. குறிப்பாக அண்ணாத்த (தமிழ்) - பெத்தண்ணா (தெலுங்கு) படத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, ஐரோப்பா, மலேசியா, மிடில் ஈஸ்ட், வடக்கு அயர்லாந்து, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ரிலீஸ் ஆனது. அண்ணாத்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் கைப்பற்றியது. இந்நிலையில், ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை Qube டிஜிட்டல் சினிமா புரொவைடர் கைப்பற்றியது.
அண்ணாத்த படத்தின் 50 வது நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாத்த படக்குழுவுக்கு தங்க செயின் அளித்துள்ளார். இதில் இயக்குனர் சிவா, டி. இமான், வெற்றி, ரூபன், மிலன், திலீப் சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பதே தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேள்வி ஆகும்.
முன்னணி இயக்குனர்களான பாண்டி ராஜ், சிறுத்தை சிவா, கே. எஸ் ரவிக்குமார், பால்கி ஆகியோர் பெயர் பரவலாக ரசிகர்கள் மத்தியில் அடிபட்டது. இதில் எச். வினோத், லோகேஷ் கனகராஜ் பெயரும் சிலகாலம் சுற்றின.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை எல்லாம் நல்லபடியாக முடிந்தால் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் பற்றிய அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.