சிவராத்திரி தினத்தன்று மறைந்த நடிகர் மயில்சாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு.." - மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ரஜினி உருக்கம்
நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். 2000- காலகட்டத்தில் நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார் . நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "மயில்சாமி என்னுடைய நெருங்கிய நண்பர். இருந்தாலும் நாங்கள் இணைந்து அதிக படங்களில் நடிக்கவில்லை. நாங்கள் அடிக்கடி சந்திப்போம். அவர் இரண்டு விஷயங்கள் குறித்து மட்டுமே பேசுவார். ஒன்று எம். ஜி. ஆர் , மற்றொன்று சிவன். கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று அங்கு கூடியிருக்கும் மக்களை கண்டு மகிழ்ச்சி அடைவார். மஹா சிவராத்திரி அன்று மயில்சாமி இறப்பு தற்செயலாக நடந்ததல்ல, ஆண்டவனின் (சிவன்) கணக்கு. அவருடைய பக்தனை அவருக்கு உகந்த நாளில் அழைத்துக் கொண்டார். மயில்சாமி குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. மயில்சாமியின் வாரிசுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் அமைய ஆண்டவனை வேண்டுகிறேன்". என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.
Also Read | "3 முறை போன் பண்ணார். எடுக்க முடியல..." மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து ரஜினி உருக்கமான பேட்டி