விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள், பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், விஜய் டிவி மூலம் பெரிய அளவில் தமிழக மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர்.
Also Read | 21 வயதில் நடந்த அறுவை சிகிச்சை.. பிரபல நடிகைக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'.. கலங்கிய பிரபலங்கள்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என தனித்தனியாக நிறைய சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் குரலால் பல பிரபலங்களை ஈர்த்து, நிறைய திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8
அந்த வகையில், தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. வழக்கம் போல, இந்த முறையும் நிறைய குழந்தைகள் தங்களின் இனிய குரலால், நடுவர்களையும் மக்களையும் கட்டிப் போட்டு வருகின்றனர். இதில், குழந்தைகள் பாடும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆவது போல, தொகுப்பாளர்களாக வரும் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்யும் காமெடிகளும் பெரிய அளவில் வரவேற்பை பெறும்.
ஜப்பான் மொழியில் ரொமான்ஸ்..
அந்த வகையில், தற்போது இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 ஆவது சீசனில் நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஜப்பான் இசைக் கலைஞரான பெண் ஒருவர், இசைக்குழுவில் இடம்பெற்றிருக்க அவரிடம் சில ஜப்பான் வார்த்தைகளை பேசி ஜாலியாக ரொமான்ஸ் செய்கிறார் மாகாபா. உடனடியாக, அருகில் இருக்கும் பிரியங்கா, மாகாபாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், அவரை அங்கிள் என்றும் குறிப்பிட்டு, ஜப்பான் பெண்ணிடம் தெரிவிக்கிறார்.
மாகாபா கொடுத்த கவுண்டர்
இதனைக் கண்ட நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரிப்பலையில் மூழ்கி போகின்றனர். அது மட்டுமில்லாமல், தன்னுடைய கொள்ளு தாத்தா ஜப்பானில் இருந்ததாகவும், பின்னர் வெள்ளத்தில் கேரளா வந்து, கடைசியில் பாண்டிச்சேரி வந்ததாகவும் கதை சொல்கிறார் மாகாபா. இவை அனைத்தையும் விட ஹைலைட்டாக, DJ'வுக்கு மாகாபா கொடுக்கும் கவுண்டர் தான் அதிகம் சிரிப்பலையை உண்டு பண்ணியது.
பிரியா படத்தில் வரும் 'என் உயிர் நீதானே' பாடலின் ஆரம்பத்தில், சிங்கப்பூர் மொழியில் தொடங்கும் வரிகளை DJ பேக்கிரவுண்டில் போட, இதனைக் கேட்ட மாகாபா, "அது சிங்கப்பூர்'ல பாடுற பாட்டு டா. அமைதியா இரு" என கூறுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8