Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top
www.garudavega.com

குத்து டான்ஸில் தெறிக்கவிடும் சன்னி லியோன்.. ஓ மை கோஸ்ட் படத்தின் ‘தும்மாங்கா’ PROMO!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படத்தில் மூன்று முக்கிய வேடங்களில் சன்னி லியோன் தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது.

Sunny Leone Starring Oh My Ghost first single Dumaanga

இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இப்படத்தின் எழுத்தாளரும், இயக்குனருமான R யுவன் கூறும்போது, “OMG என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த படம், இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் திரையரங்குகளில்  பார்வையாளர்களுக்கு ஒரு  சிறப்பான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும். இதில்  சன்னி லியோன் பாத்திரத்திற்கு ஒரு வரலாற்று பின்னணி  இருப்பதால், அவரது தோற்றம் முற்றிலும் கற்பனையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இது  படத்திற்கு ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘தும்மாங்கா’ என்கிற பாடலின்  சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் சன்னி லியோன் லுங்கியுடன் தென்னிந்திய ஸ்டைலில் குத்து டான்ஸ் ஆடி பட்டையை கிளப்புகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sunny Leone Starring Oh My Ghost first single Dumaanga

People looking for online information on Oh My Ghost first single, OMG, OMG first single, Sunny Leone will find this news story useful.