பாலிவுட் நடிகை சன்னி லியோன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மும்பைக்கு மாறி மாறி பயணம் செய்து வருபவர். கடந்த மாதம் இந்தியாவை விட்டு லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் பறந்தார். கொரோனா பிரச்சனையால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு உள்ளதால், சன்னியால் இந்தியாவுக்கு திரும்பி வர முடியவில்லை.
தனது குடும்பத்தினருடன் ஏன் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவு செய்தார் என்பதைப் பற்றி சன்னி ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார். " மும்பையை விட்டு போகவே எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் லாஸ் ஏஞ்சல்ஸ் வர முடிவு செய்ய இவ்வளவு நாள் ஆனது. வருத்தத்துடன் தான் ப்ளைட் ஏறினோம்’ என்றார்.
குடும்பத்துடன் மும்பையை விட்டு கிளம்பியதற்கான காரணத்தை அவர் கூறினார், “டேனியலின் அம்மா மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருப்பது எங்களுக்கு முக்கியமானது. எல்லோரையும் போலவே, அன்புக்குரியவர்களுடன் இருக்க அவர்கள் ஆசைப்பட்டார்கள். அதனால்தான் இந்த முடிவு " என்றார்.
சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபருக்கு நிஷா, ஆஷர் மற்றும் நோவா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் எப்படி இந்த இடமாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று கேட்டபோது, அவர் கூறியது, “நாங்களே ஆச்சரியப்படும்விதமாக, குழந்தைகள் இதை மிகச் சரியாக எடுத்துக் கொண்டார்கள். மும்பை டு லாஸ் ஏஞ்சல்ஸ் மிக நீண்ட பயணம்தான், ஆனால் குழந்தைகள் வீட்டிற்கு வந்த முதல் நாளே வெளியே சென்று விளையாடத் தொடங்கிவிட்டார்கள். நாள் முழுவதும் வெளியேதான் விளையாடினார்கள். வீட்டுக்கு உள்ளேயே அவர்கள் வர விரும்பவில்லை. இது அவர்களுக்கு புதுவித அனுபவமாக இருந்தது. ”
இந்தியாவுக்குத் திரும்புவதற்கான தனது திட்டம் குறித்தும் சன்னி லியோன் கூறினார், “சர்வதேச விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் போது நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வருவோம். இந்தியாவுக்குப் புறப்படும் முதல் விமானத்தில் நாங்கள் வர விரும்புகிறோம்." என்றார்.