சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேன்லில் ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். இதில், “உங்கள் திருமண வாழ்வின் முக்கிய தருணத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.” என நடிகை சன்னி லியோனிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “நீங்கள் உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்யலாம். ஒருவரை சந்தித்து முதலில் நட்பாக பழகுங்கள். பிறகு காதல் வருகிறது. என்னுடைய காதல் ப்ரொபோஸல் மிக எளிமையானது. அப்படி தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். நாங்கள் வீட்டில், இரவு தூங்க செல்லும் முன் ‘என்னை கல்யாணம் செய்து கொள்’ என்று கூறினார்(சிரிக்கிறார்).
அது தான் ப்ரொபோஸல். அப்போது ஒரு ஜூவல்லரி பாக்ஸில் இருந்து, பெர்ஃபெக்டான ஒரு மோதிரத்தை எடுத்துக் கொடுத்தார், பின்னர் என்னை திருமணம் செய்ய போவதாக சொன்னார். ” என குறிப்பிட்டுள்ளார்.