BEHINDWOODS GOLD MEDALS விருது 2022 நிகழ்வில்.. விஜய் சேதுபதி பாட்டுக்கு 'DANCE'.. அமர்க்களம் செய்த சன்னி லியோன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Awards இன்று மற்றும் நாளை (மே 21 & 22) ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத் திடலில் வைத்து நடைபெறவுள்ளது.

Sunny leone dance in Behinwoods gold medals awards 2022

ஏற்கனவே, நடிகைகள் சன்னி லியோன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பிரபலங்கள், Behindwoods கோல்டு மெடல் விருதுகள் மேடையில், தோன்றவுள்ளனர்.

இது தவிர இன்னும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் Behindwoods விருது மேடையில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு, பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

தொடர்ந்து, நடிகைகள் ஆண்ட்ரியா, லிஜோமோள் ஜோஸ், பாடகி ஜோனிதா காந்தி, நடிகர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ் பாடலுக்கு சன்னி லியோன் நடனம்

இந்நிலையில், நடிகை சன்னி லியோன் Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக வந்த போது, தமிழ் பாடல் ஒன்றிற்கு நடனமாடிய வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகி இருந்தது.

அனிருத் இசையில், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. அந்த வகையில், 'Dippam Dippam' என்னும் பாடலும் பலரின் பிளே லிஸ்ட்டை ஆக்கிரமித்திருந்தது. Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சிக்கு வந்த சன்னி லியோன், Dippam Dippam பாடலுக்கு KPY பாலாவுடன் இணைந்து நடனமாடி இருந்தார். அதிலும், கடைசியில் பாலாவின் Trademark ஸ்டெப்பையும் சன்னி லியோன் இணைந்து ஆடி இருந்தார்.

 

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone dance in Behinwoods gold medals awards 2022

People looking for online information on Behindwoods Gold Medals 2022, BGM 8, Sunny Leone will find this news story useful.