www.garudavega.com

சன் டிவி -யில் ஒளிபரப்பான பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோவா: சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலின் நடிகை இன்று (27.01.2022) திருமணம் செய்துள்ளார்.

Sun TV Serial Actress Married Picture went viral on social media

பிரபல சீரியல் நடிகையும், பாலிவுட் நடிகையுமான மௌனி ராய்க்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு விளம்பர மாடலாக அறிமுகமான மௌனி ராய் அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான பஞ்சாபி மொழிப்படமான ஹீரோ ஹிட்லர் இன் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

Sun TV Serial Actress Married Picture went viral on social media

2017 வரை சீரியலில் நடித்து வந்த மௌனி ராய்க்கு பெரும்பாலான ரசிகர்களை உருவாக்கியது நாகினி சின்னத்திரைத் தொடர்தான். இந்தியில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பான இந்தத் தொடர் ஹிட் கொடுத்ததையடுத்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. தற்போது ரன்பீர் கபூர், ஆலியாபட் இணைந்து நடித்திருக்கும் “பிரம்மாஸ்திரா‘‘ திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

Sun TV Serial Actress Married Picture went viral on social media

மாடல், சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பயணித்து வரும் 36 வயதான மௌனி ராயும், கேரளாவைச் சார்ந்த பிரபல தொழிலதிபருமான சூரஜ் நம்பியாரும் காதலித்து வந்தனர். அவ்வப்போது இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை  சமூகவலைதளங்களில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில் கோவாவில் கேரள, வங்காள முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

Sun TV Serial Actress Married Picture went viral on social media

இது குறித்து சுராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'என்னுடைய சிறந்த நண்பியை திருமணம் செய்திருக்கிறேன். என்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்!' என பதிவிட்டிருக்கிறார். மெளனி ராய்யும், 'கடைசியாக என்னவனைக் கண்டுபிடித்துவிட்டேன்!' எனப் பதிவிட்டிருக்கிறார்.

Sun TV Serial Actress Married Picture went viral on social media

Sun TV Serial Actress Married Picture went viral on social media

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sun TV Serial Actress Married Picture went viral on social media

People looking for online information on Actress Marriage, Marriage, Mega Serial, Mouni Roy, Sun TV will find this news story useful.