தமிழ் ரசிகர்களின் பல வருட ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற Behindwoods-ன் வெற்றிகரமான Behindwoods Gold Medals விருதுகளைத் தொடர்ந்து அண்மையில் வழங்கப்பெற்றது தான் Behindwoods Gold Icons டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியஒல் விருதுகள்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை அபர்ணா பாலமுரளி, ஆர்ஜ்.ஜே.பாலாஜி நடிகர் ஆரி, குக் வித் கோமாளி அஸ்வின், புகழ், சிவாங்கி மற்றும் பல சின்னத்திரை, ரியாலிட்டி ஷோ, யூடியூப் பிரபலங்கள் பங்குபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு விருதுகள் பல்வேறு பிரபலங்களுக்கும் திறமையாளர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் சுதா கொங்காராவுக்கு The Behindwoods Gold - Best Director விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விருதைப் பெற்றுக்கொண்ட சுதா கொங்காரா சூரரைப் போற்று டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் நல்ல ரெஸ்பான்ஸ்களை பெற்றது குறித்து பேசும்போது, “எனது குரு மணி சார் அழகழகாக காட்சிகளை மெனக்கெட்டு எடுப்பார். உதவியாளர்களாக நாங்களும் மிகவும் மெனக்கெட்டு அவற்றுக்காக வேலை செய்திருப்போம்.
ஆனால் அவற்றை இறுதியாக வெட்டி எடுத்துவிடுவார். எங்களுக்கு எரியும். ஆனால் ஒரு அழகான காட்சியை விட திரைப்படம் முக்கியம் என்பார். அதை அவரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்” என குறிப்பிட்டார்.
மேலும் சூரரைப் போற்று படம் தொடர்பில் சூர்யாவை பற்றி பேசியவர், “சூர்யாவை 20 வருடங்களாக எனக்கு தெரியும். அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார். நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும். அவர் சைலண்ட்டாகவே இருப்பார்.
நிஜ வாழ்க்கையில் சூர்யா நிறைய கோவப்படுவார். ஆனால் அவருடைய அந்த ரியல் கோபத்தை தான் அவர் மாறன் கதாபாத்திரமாக மடைமாற்றம் செய்தார். அந்த ரியலான கேரக்டருக்காக அவர் தன்னையே கொடுத்து கொண்டுவந்துள்ளார்.
சூர்யாவோ, மாதவனோ ஒவ்வொரு முறையும் இந்த நடிகர்களுடன் பணிபுரியும் போது அடுத்த 10 வருடத்துக்கு இவர்களுடன் படம் பண்ண வேண்டும் என நினைப்பேன். ஆனால் அமைய வேண்டும்.!” என குறிப்பிட்டுள்ளார்.