'திரில்லிங்கான நாள்' - சல்மான்கானின் 'தபாங் 3' முதல் நாள் ஷூட்டிங்கில் பாகுபலி நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சல்மான் கான் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் 'தபாங்' . இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழில் சிம்பு நடிக்க ஒஸ்தி என்ற பெயரிலும், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க 'கப்பர் சிங்' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.

Sudeep shares his Experience in Prabhu Deva and Salman Khan's Dabangg 3

அதனைத் தொடர்ந்து வெளியான 'தபாங் 2' திரைப்படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.  தற்போது இந்த படத்தின் 3 ஆம் பாகம் 'தபாங் 3' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபு தேவா இயக்குகிறார்.

இந்த படத்தை சல்மான் கான் பிலிம்ஸ் மற்றும் அர்பாஸ் கான் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் சுதீப் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானுடன் ஜிம் பின்னணியில் உள்ள புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், இது ஒரு திரில்லிங்கான நாள்.  இது ஒரு அற்புதமான குழு, அற்புதமான மனிதர்கள்.

படப்பிடிப்பு தளத்தில் ஜிம் இருப்பது கூடுதலான போனஸ். முதல் நாள் தபாங் 3 படப்பிடிப்பு சிரிப்புடன் நிறைவடைந்தது. நன்றி சல்மான்கான் அவர்களே, என்னை வீட்டில் இருப்பது போன்று பார்த்துகொண்டதற்கு' என்று தெரிவித்திருந்தார்.

Sudeep shares his Experience in Prabhu Deva and Salman Khan's Dabangg 3

People looking for online information on Dabangg 3, Prabhu Deva, Salman Khan, Sudeep will find this news story useful.