Reliable Software
www.garudavega.com

குக் வித் கோமாளி வைல்டு கார்டு சுற்றில் நடந்த டுவிஸ்ட்.. எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் semi-finals முடிந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.எனவே இன்னும் சில எக்ஸ்ட்ரா வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் கூட நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல் இந்த வாரம் வைல்டு கார்டு சுற்று நடைபெற்று  வருகிறது.

sudden twist in wildcard cooku with comali குக் வித் கோமாளி டுவிஸ்ட்.

இந்நிலையில் இந்த வைல்டு கார்டு சுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான போட்டியில் வென்று யார் அந்த பிரமாண்ட பைனல்ஸ் சுற்றுக்கு செல்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே அஸ்வின், கனி மற்றும் பாபா பாஸ்கர் மூவரும் கடைசி சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் எப்பொழுதுமே இப்படிப்பட்ட வைல்டு கார்டு போட்டியில் ஒருவர்தான் தேர்வாகி இறுதி போட்டிக்கு செல்வார். ஆனால் இம்முறை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இரண்டு பேர் போட்டியை வென்றுள்ளனர். ஆம் ஷகிலா மற்றும் பவித்ரா இருவருமே சிறப்பாக சமைத்து நடுவர்களின் பாராட்டைப் பெற்றனர். எனவே இந்த சீசனில் நான்காவது, ஐந்தாவது நபராக இறுதி போட்டிக்கு செல்பவர்கள்  ஷகிலா  மற்றும் பவித்ரா தான் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sudden twist in wildcard cooku with comali குக் வித் கோமாளி டுவிஸ்ட்.

People looking for online information on Cooku with comali will find this news story useful.