பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இல்லை என்று கமல் அறிவித்தார். அதற்கு முந்தைய வாரம் வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே எதுவும் நடக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பலரும் குழம்பி வந்தனர்.
அந்த வகையில் வைரலாகும் தகவல் என்னவென்றால் இந்த வாரம் சுசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மை என்பது போல் ஆகிவிட்டது. அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "என்னை காப்பவர்" என்று கூறி ஆன்மீக போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு கீழே ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.