பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்றையதினம் பிக்பாஸ் கலந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நிலையில், இன்றைய தினம் வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் சம்பவம் நடக்கிறதை காணமுடிகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் சுசித்ரா சனமிடம் பேசும்போது, பாலாஜி ஷிவானி காதலிக்கிறார்களா? என்பது போல் கேட்டு கொண்டிருந்தார். அதன் பின்பு இந்த வீட்டில் இன்னொரு காதலும் இருக்கிறது. சோம் சம்யுக்தாவை காதலிக்கிறார் என்று உறுதியாகி சொன்னார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு சோம் ரம்யாவை விரும்புகிறார் என்று போட்டியாளர்கள் அவரை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் இப்படி சுசித்ரா சொன்னது அவர் எதையாவது தவறாக புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.