பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனராக இருந்த ஜூடோ ரத்னம் தனது 93 ஆவது வயதில் மறைந்துள்ளது, சினிமா பிரபலங்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பிறந்தவர் ஜூடோ ரத்னம். இவர் தனது சினிமா பயணத்தை ஒரு நடிகனாக ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர், ஜெய்சங்கர் நடித்திருந்த வல்லவன் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி கலைஞர் ஆகவும் அறிமுகமாகி இருந்தார் ஜூடோ ரத்னம்.
இதனைத் தொடர்ந்து, 70 மற்றும் 80 களில் கொடிக் கட்டிப் பறந்த நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் ஏராளமான படங்களுக்கு சண்டைப் பயிற்சியையும் ஜூடோ ரத்னம் கற்றுக் கொடுத்துள்ளார். அதிலும் நடிகர் ரஜினிகாந்திற்கு மட்டும் சுமார் 46 படங்கள் சண்டைப் பயிற்சி இயக்குனராக இருந்துள்ளார். இதனால், அந்த சமயத்தில் ரஜினி என்றாலே ஜூடோ ரத்னம் தான் என சொல்லும் அளவுக்கு புகழ் பெற்று விளங்கியவர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான பாண்டியன் படம் வரையில் ஜூடோ ரத்னம் சண்டை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சுமார் 1200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளாராக பணியாற்றியதால் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் ஜூடோ ரத்னம் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் ஜூடோ ரத்னம் பெற்றுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கூட ஏராளமான படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக ஜுடோ ரத்னம் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், தனது 93 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக ஸ்டாண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners
பின்னர் அவரது உடல் குடியாத்தம் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஜூடோ ரத்னம் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.