மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு பிறகு நெப்போடிஸம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெப்போடிஸம் போலவே குரூபிஸம் என்ற வாசகம் கோலிவிட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் ஷாந்தனு கோலிவுட்டில் குரூபிஸம் இருப்பதாக அதிரடியாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியும், 'யார் எந்த படத்தில் நடிக்க வேண்டும்' என்பதை ஒரு குரூப் முடிவு செய்வதாக தெரிவித்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''குரூபிஸம் பாலிவுட்டில் மட்டுமல்ல இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒரு சில தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது. மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பது அதனால் தான்.
தான் மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்த்துக்கொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும் ஃபைனான்சியர்களை கலைத்து விடுவதும் படத்தை பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகிஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள்.
அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன்பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூபிஸம் விரைவில் ஒழிய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
#tfpc pic.twitter.com/eAWUvz7xCw
— sureshkamatchi (@sureshkamatchi) July 29, 2020