‘வந்தா நாஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் முதல் தொடங்கவுள்ளது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு, ‘எஸ்.டி.ஆர் இஸ் பேக்.. மாநாடு ஷூட்டிங் மே மாதம் முதல் தொடங்குகிறது’ என ட்வீட் செய்திருந்தார். சமீபத்தில் லண்டன் சென்றிருந்த நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்து அசத்தலான கெட்டப்பில் சென்னை திரும்பியுள்ளார்.
சிம்புவின் தம்பி குரளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு புதிய லுக்கில் இருந்தது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையான முறையில் ஒர்க்-அவுட் செய்து 37 நாட்களில் 13 கிலோ எடையை குறைத்துள்ளார்.
‘மாநாடு’ படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு நடிக்கவிருப்பதாக தெரிகிறது. சிம்புவின் அரசியல் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
And he is back!!! #maanaadu rolls from May!!! #str pic.twitter.com/miH74lTwhf
— venkat prabhu (@vp_offl) April 29, 2019