விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார்.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்ப போட்டோ சூட் படப்பிடிப்பு நேற்று ஆரம்பாகி விட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இவர் சிம்புவை வைத்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள மாநாடு படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
இனி, தம்பி @SilambarasanTR_
அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளே! இன்று #நதிகளிலேநீராடும்சூரியன் போட்டோ ஷூட்டுடன் ஆரம்பமாகிறது. வாழ்த்துகள்
அண்ணன் @IshariKGanesh @menongautham சார் ❤️❤️💐💐💐💐 pic.twitter.com/3AY6SLgq0P
— sureshkamatchi (@sureshkamatchi) July 21, 2021
சுரேஷ் காமாட்சி, தனது டிவிட்டர் பக்கத்தில் “இனி, தம்பி @SilambarasanTR_
அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளே! இன்று #நதிகளிலேநீராடும்சூரியன் போட்டோ ஷூட்டுடன் ஆரம்பமாகிறது. வாழ்த்துகள்
அண்ணன் @IshariKGanesh @menongautham சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.