Udanprape others
www.garudavega.com

"உண்மையான பெயர் இதுவா?".. BIGGBOSS அக்‌ஷரா குறித்து தீயாய் பரவும் அதிர்ச்சி பின்னணி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசனின் முதல் நாள் 18 போட்டியாளர்கள், நடிகர் கமல்ஹாசனால் அறிமுகப் படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.

stories spreading about akshara reddy biggbosstamil5

இந்த போட்டியாளர்களுள் ஒருவராக இருப்பவர் அக்‌ஷரா ரெட்டி. அக்‌ஷராவின் கதையை கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மற்ற சக போட்டியாளர்கள் பெரும்பாலும் அந்த கதை தங்களுக்கு கனெக்ட் ஆகவில்லை என்றும் அதேசமயம் அந்த கதையில் அக்‌ஷரா என்ன செய்தார் என்பது முக்கியமான ஒன்று என்றும் குறிப்பிட்டனர்.

stories spreading about akshara reddy biggbosstamil5

அதற்காகவே பலரும் டிஸ்லைக் செய்து இருந்தனர். எனினும் அக்‌ஷரா, பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னுடைய இயல்பு மாறாமல் இருந்து வருவதாகவும், அவருக்கு பல்வேறு ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் அக்‌ஷரா ரெட்டி பற்றிய நிறைய தகவல்கள் இணையதளத்தில் உலவி வருகின்றன.

stories spreading about akshara reddy biggbosstamil5

அதன்படி அக்‌ஷரா ரெட்டியின் உண்மையான பெயர் ஷ்ரவ்யா சுதாகர் என்றும், 2013-ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த மிகப்பெரிய தங்க கடத்தல் வழக்கில் அக்‌ஷரா ரெட்டியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், அதன்பின்னர் அந்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று அக்‌ஷரா மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

stories spreading about akshara reddy biggbosstamil5

அத்துடன் அந்த சமயத்தில் அக்‌ஷரா ரெட்டியின் புகைப்படங்களுக்கும், தற்போது இருக்கும் அக்‌ஷரா ரெட்டியின் புகைப்படங்களுக்கும், ஏகப்பட்ட வித்தியாசம் இருப்பதாகவும், அதற்கு அவர் செய்திருக்கும் சில பிளாஸ்டிக் சர்ஜரி காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்படுவதுடன், அந்த விவகாரத்தால் தான், ஷ்ரவ்யா சுதாகர் தன்னுடைய பெயரை அக்‌ஷரா என மாற்றி இருக்க வேண்டும் என்றும் செய்திகள் பரவி வருவதை காண முடிகிறது.

stories spreading about akshara reddy biggbosstamil5

எனினும் இது போன்ற பல விஷயங்கள் எப்போதுமே இணையதளங்களில் விஷயங்களும், வதந்திகளும் வலம் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த விஷயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களே விளக்கம் கூறினால் தான் இந்த விஷயங்களில் இருக்கும் உண்மைத்தன்மை தெரியும் என்பது ஒரு பக்கம் இருக்கும் நிதர்சனமான உண்மை.

stories spreading about akshara reddy biggbosstamil5

மாடலிங் துறையில் பிரபலமாக அறியப்படும் அக்‌ஷரா ரெட்டி, பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்பதன் மூலமாக தனக்கு இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும் என நம்புவதாக கதை சொல்லும்போது தெரிவித்திருந்தார் என்பதும், இதற்கு முன்பாக வில்லா டூ வில்லேஜ் ஷோவில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: “மூஞ்சிக்கு நேரா பேசுங்க.. எனக்கு நடிக்க வராது”.. பாவனிக்கும் அக்‌ஷராவுக்கும் வெடித்த சண்டை..!

மற்ற செய்திகள்

Stories spreading about akshara reddy biggbosstamil5

People looking for online information on Akshara, AksharaReddy, BiggBoss5, BiggBossTamil5 will find this news story useful.