கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி பற்றி பேசிய கிறிஸ் ராக்கை அறைந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இதுபற்றி முதன்முதலில் மனம் திறந்திருக்கிறார் கிறிஸ் ராக்.
அடடே …ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மியூசிக் ஆல்பமா? இவங்களும் இருக்காங்களா? மாஸ் update!
ஆஸ்கார்
திரைத்துறையில் அளிக்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று ஆஸ்கார். உலகம் முழுவதும் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து கலைஞர்களுக்கு விருது அளிக்கும் இந்த விழா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நேற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆஸ்கார் விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கோபமடைந்த ஸ்மித்
தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து பேசினார். இதனால் கோபமடைந்த ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கை பளார் என்று அறைந்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
மன்னிப்பு
இதனை அடுத்து தன்னுடைய செயலுக்கு வருந்துவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில்,"எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. ஆஸ்கார் இரவில் அகாடமி விருதுகளின் போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்மித்.
மனம் திறந்த கிறிஸ் ராக்
இந்நிலையில் நேற்று பாஸ்டனில் நடைபெற்ற ஒரு காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிறிஸ்," பலரும் என்னிடம் உங்களது வார இறுதி எப்படி இருந்தது? என கேட்கிறார்கள். நீங்கள் அதைப்பற்றி (ஆஸ்கார் சம்பவம்) கேட்க ஆவலோடு வந்திருந்தால் என்னிடம் கடந்த வார இறுதியில் எழுதப்பட்ட ஜோக்குகள் மட்டுமே இருக்கின்றன. என்ன நடந்தது என்பது குறித்து யோசித்துக்கொண்டே இருக்கிறேன். விரைவில் அதுபற்றி பேசுவேன். அது சீரியஸாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும்" என்றார்.
மேலும், நிகழ்ச்சியை காண வந்திருந்த மக்கள் கூச்சல் எழுப்பவும் தொடர்ந்து பேசிய ராக்," நான் சில நகைச்சுவைகளை சொல்ல இருக்கிறேன்" என தனது நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
ஆஸ்கார் மேடையில், வில் ஸ்மித் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து புகார் அளிக்க கிறிஸ் ராக் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!