BMB புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இவர் பல படங்களை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தவர் இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா ( K.C.Pokadia ).
சென்னையில் வளர்ந்த இவர், இந்தியில் மட்டும் 59 படங்களை தயாரித்துள்ளார். அதில் 11 படங்களில் அமிதாப்பச்சனும், 5 படங்களில் ரஜினிகாந்தும்,18 படங்களில் சல்மான்கான்,ஷாருக்கான், அமீர்கான் இந்த மூன்று கான்களும் நடித்தார்கள்.
மேலும் 5 படங்களில் அக்சய் குமாரும், மற்ற படங்களில் பிரபல நடிகர்கள் நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்தை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இவர் இந்தியில் மட்டும் 38 படங்களை இயக்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகதென்னிந்திய மொழி இயக்குனர்கள் பலரை இந்தியில் அறிமுகப்பபடுத்தியுள்ளார். இவர் இப்பொழுது தமிழிலும் தெலுங்கிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
இவர் கடைசியாக தமிழில் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து ராக்கி தி ரிவென்ஜ் (2019) படத்தை இயக்கினார். தல அஜித் நடித்த 'ஆசை' படத்தையும், தொட்டால் சினுங்கி, கிழக்கு வாசல் போன்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்து தயாரித்தவர்.
இந்த B.M.B. புரொடக்ஷன்ஸ் நிறுவத்தில் 25 வருடங்களாக ஒரு அங்கமாக ( one of the Director ) இருக்கும் தமிழ் தயாரிப்பாளர், நடிகர் தமிழ்மணியின் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார் கே.சி.பொக்காடியா.
அவரிடம், தமிழில் பல படங்களை தயாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.
#Bollywood Famous director & producer #KCBokadia,who introduced #Superstar #Rajinikanth n Hindi #BMBProductions,comes back to Tamil.He has produced 59 hindi films,5hindi Films with Rajini.He s all set to produce movies n Tamil.#tamilmani @johnsoncinepro https://t.co/dZGVyzxtOS
— Johnson PRO (@johnsoncinepro) August 19, 2021