சிங்கப்பூரின் பிரபல அருங்காட்சியகமான MADAME TUSSAUDS -இல் பிரபல நடிகை ஸ்ரீதேவி நினைவாக மெழுகு சிலை வைத்துள்ளார்கள்.
பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி. மூன்று முடிச்சி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் ஏராளமான தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல வெற்றி படங்களை கொடுத்து தேசிய அளவில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தார். மயில் என்ற 16 வயதினிலே படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் ஸ்ரீதேவி.
இந்நிலையில் சிங்கப்பூரின் பிரபல அருங்காட்சியகமான MADAME TUSSAUDS -இல் அவரின் நினைவாக மெழுகு சிலை வைத்துள்ளார்கள். அவரின் கணவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர் இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sridevi lives forever in not just our hearts but also in the hearts of millions of her fans. Eagerly waiting to watch the unveiling of her figure at Madam Tussauds, Singapore on September 4, 2019. #SrideviLivesForever pic.twitter.com/AxxHUgYnzt
— Boney Kapoor (@BoneyKapoor) September 3, 2019