தயாரிப்பாளர் SR பிரபு சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Also Read | மின்னல் முரளி பாத்துட்டு.. கமல் பகிர்ந்த விஷயம்.. வியப்பில் ஆழ்ந்த காளிதாஸ்.. 'Exclusive'
வெற்றிப்பட தயாரிப்பாளர்…
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டோரை வைத்து மாஸ் படங்களை எடுப்பது ஒரு பக்கம் என்றால் நல்ல கதைக்களத்தோடு கம்மியான பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்கி அவற்றையும் வெற்றி படங்களாக்கியவர் எஸ் ஆர் பிரபு. இவர் தயாரிப்பில் வெளியான அருவி, டாணாக்காரன், மாயா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.
அடுத்தடுத்த படங்கள்…
தற்போது இவரின் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் பொட்டன்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகின்றன. அவற்றில் ஒன்றான O2 நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர்களின் படமான ‘டாணாக்காரன்’ நேரடியாக ஓடிடியில் வெளியானது. திரையரங்குகளுக்கும் ஓடிடிகளுக்கும் அடுத்தடுத்து இவர்களின் தயாரிப்பில் படங்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
வைரல் டிவீட்…
இந்நிலையில் தற்போது SR பிரபு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “அனைவரும் பைத்தியக்கார தனமான வேகத்தில் படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். முதலில் ஓடிடி உடனான ஒப்பந்தத்தை முடிப்பது, பாதுகாப்பான வியாபாரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டுக்கான முன்னணி ஓடிடி நிறுவனங்களின் திரைப்பட திட்டங்கள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. குறைந்த மற்றும் மீடியம் பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் அல்லது வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் அபாயத்தில் இருப்பது போல தோன்றுகிறது. #BeSafeTamilCinema” என்று கூறியுள்ளார். இந்த டிவீட் இப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Also Read | KGF 2 ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது? அமேசான் ப்ரைம் வெளியிட்ட ‘மாஸ்’ Update