சென்னை: Spider-Man No Way Home திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.
Spider Man Cast & Crew
உலகம் முழுதும் 2021 டிசம்பர் 16 வெளியான இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள், ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியது. மார்வல் திரையுலகத்தில் Spider-Man சூப்பர் ஹீரோவின், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் Spider-Man No Way Home. இப்படத்தில் Tom Holland சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும் அவருக்கு ஜோடியாக Michelle 'MJ' பாத்திரத்தில் Zendaya வும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய Doctor Stephen Strange பாத்திரத்தில் Benedict Cumberbatch நடித்துள்ளார்.
முதல் முறையாக இணைந்த நடராஜ் - ராம்கி! வெளிவந்த வேற மாரி புது பட அப்டேட்!
Spider Man Multiverse
இப்படம் மல்டிவெர்ஸ் எனும் வித்தியாசமான கான்செப்டில் பல உலகங்களை இணைக்கும் கதைக்கருவில் உருவாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன் வந்த Spider-Man பட பாகங்களின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இப்படத்தில் மீண்டும் வருகிறது. 10 வருடங்களுக்கு முன் ரசிகர்களின் கனவுகளை நிரப்பிய Doctor Otto Octavius, Green Goblin மற்றும் Electro பாத்திரங்கள் மீண்டும் இப்படத்தில் வருகின்றன. மேலும் இப்படத்தில் மூன்று ஸ்பைடர் மேன் பாத்திரங்கள் உள்ளன. இதனால் உலகம் முழுதும் படத்திற்கு வரலாறு காணாத அளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Box Office Collection
மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது Spider-Man No Way Home திரைப்படம். Spider-Man No Way Home திரைப்படம் இந்தியா முழுதும் 2021 டிசம்பர் 16 அன்று தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு,மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் வெளியானது. இந்தியா முழுவதும் முதல் நாளில் 41.50 கோடி ரூபாய் GROSS கலெக்சனாக வசூலித்தது. 32.67 கோடி ரூபாய் நெட் கலெக்சனாக கிடைத்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்து முதல் நான்கு நாளில் இந்த படம் 138.55 கோடி ரூபாயை GROSS கலெக்சனாக வசூலித்தது. 108.37 கோடி ரூபாய் நெட் கலெக்சனாக கிடைத்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
போடு வெடிய!!!! வேறலெவல் புகைப்படங்களுடன் வெளியான தனுஷ் - சம்யுக்தா பட ஷூட்டிங் அப்டேட்!
இந்நிலையில் இப்படம் வெளியாகி 18 நாளில் இந்தியாவில் 260 கோடி ரூபாய் GROSS கலெக்சனாக வசூல் செய்துள்ளது. 202 கோடி ரூபாய் நெட் கலெக்சனாக கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 10200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான 18 நாட்களில் ஹாலிவுட்டின் 3வது பெரிய படமாக Spider Man மாறியுள்ளது.