ஸ்பைடர் மேன் சீரிஸ் திரைப்படங்களை இனி தயாரிக்கப்போவதில்லை என மார்வெல் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ஸ்பைடர்மேனுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களில் ஒரு கதாபாத்திரமாக வரும் ஸ்பைடர்மேன் இனி மார்வெல் படங்களில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அதன் உரிமையை சோனி நிறுவனம் வைத்திருக்கிறது. ஸ்பைடர் மேன் படத்தை மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இணைக்க 2015ஆம் ஆண்டு டிஸ்னியும் சோனியும் இணைந்து ஒரு ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் ஸ்பைடர் மேன் படத்தை உருவாக்கும்போது இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பு செலவு செய்யும் என்றும், படத்தின் வசூலை ஒப்பந்தத்தின் படி பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், தற்போது ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பகிர்வதில் சோனி நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்படாததால் மார்வெல் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது. மார்வெல் நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் இனி வெளியாவதை கற்பனை செய்ய முடியவில்லை என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள், மார்வெலின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுவரை வெளியான ஸ்பைடர்மேன்களிலேயே டாம் ஹாலந்து நடித்திருக்கும் அதுவும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இருப்பதுதான் நன்றாக இருக்கிறது. அதனால் இதை தொடர வேண்டும் என்பதி குறிப்பிட்டு #SaveSpiderman என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.