பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார். தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி அவர்களது நடவடிக்கைகள் பற்றி தற்போது மருத்துவர்கள் மனம் திறந்துள்ளனர். அவர்கள் கூறும் பொழுது அவரின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களை நாங்கள் ஒளிரச் செய்தோம். மேலும் ஐபிஎல் சீசன் துவங்கிய போது தனது அறையில் டிவி வேண்டும் என்று கேட்டார்.
சில நேரங்களில் அவரது மகன் எஸ்.பி சரண் அவர்கள் SPB-க்காக அவரது நண்பர்கள் வெளியிட்ட வீடியோக்களையும், பேட்டிகளையும் அவருக்கு காண்பித்தார். மேலும் ஒருநாள் இசைஞானி இளையராஜா அவர்கள் எஸ்.பி.பி-காக வெளியிட்ட வீடியோவைப் அவரது மகன் அவருக்குக் காட்டிய பொழுது, அவரது மகனை அருகில் வரச் செய்து அந்த போனிற்கு முத்தமிட்டார். அந்த நொடியை எங்கள் யாராலும் மறக்க முடியாது" என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.