மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பிபாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவர் மறைவு குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. அதற்கு பதிலளிக்கும் விதமாக எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
நாங்கள் தொடர்ச்சியாக மருத்துவமனை கட்டணங்களை தொடர்ச்சியாக செலுத்தி வந்தோம். என்னோட அப்பா காலமானபிறகு, மருத்துர்களிடம் செலுத்த வேண்டிய தொகை குறித்து கேட்டபோது மறுத்துவிட்டனர். எங்களுக்குள் பில்லிங் பிரச்சனை இல்லைவே இல்லை.
மேலும் என் அப்போவோட இறப்பு சான்றிதழில் நான் அறிவித்த நேரம் தான் இருக்கிறது. அப்பா முன்னாடியே இறந்ததாகவும் இறுதித்தொகையை செலுத்தாததால் முதலில் அறிவிக்கவில்லை என்றும் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை.
கொரோனா நெகட்டிவ்னு முதலிலேயே சொல்ல வேண்டியதா இருந்தது. கொரோனா பிரச்சனையை ஏற்படுத்திவிட்டு போய்டுச்சு. நுரையீரலை மேம்படுத்துவது தான் முக்கியமான விஷயமா இருந்தது. கொரோனா இல்லனு சொன்னா, அவர் குணமாகிவிட்டார். அவர் வீட்டுக்கு வந்துடுவார் என்பது போல அர்த்தமாகிவிடும் என்று சொன்னார். அப்பாவுக்கு நுரையீரல் செயல்பாடு மிகுந்த பிரச்சனையாக இருந்தது. என்றார்.