உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவதார் 2 படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியான முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Also Read | 'துணிவு' படத்தின் மூன்றாவது லுக்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த அஜித்தின் மிரட்டல் போஸ்டர்!
கடந்த 2009 ஆம் ஆண்டு ‘டைட்டானிக்’ பட புகழ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார். இந்த படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் இமாலய வெற்றியால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.
அவதார் படம்தான் உலகில் அதிக வசூல் செய்த படம் (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற சாதனையைப் படைத்திருந்தது. அதற்கு முன்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் அந்த சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பின்னர் கடந்த 2020 ஆம் வருடத்தில் அவதார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். மேலும், அவதார் 2, 2021ம் ஆண்டு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரனமாக 2022ம் ஆண்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளிவந்தது.
இதையடுத்து படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி அவதார் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்பட்டது. தென்னகத்தை பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் ‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு தென்னிந்தியா தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் பல இடங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்கள் மற்றும் எக்ஸிபிட்டர்ஸ் (exhibitors) அனைவரது கவனமும் படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலின் மீதே உள்ளது.
ஐந்து நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் படத்தின் முன்பதிவுகள் எதிர்பார்த்ததை விடவும் குறிப்பாக தென்னகத்தில் நன்றாகவே உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் தங்களுடைய மாநிலங்களில் ‘அவதார் 2’ படத்தை வெளியிடுவதற்காக 100-150 கோடி ரூபாய் பணத்தை மேற்கோள் காட்டியுள்ளதாக தெரிகிறது. இன்னும் இது குறித்தான உறுதியான முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும் ‘அவதார் 2’ படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அதிகமான எதிர்பார்ப்பும் அவர்கள் காட்டும் ஆர்வமுமே இந்த முடிவை விநியோகஸ்தர்களை எடுக்க வைத்துள்ளது.
‘அவதார்2’ திரைப்படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாவதை முன்னிட்டு தெலுங்கு விநியோகஸ்தர்கள் தங்களது சொந்தத் திரையரங்கத் திரைகளையே இந்தப் படத்திற்கு ஒதுக்க முன்வந்துள்ளனர்.
Also Read | Bharathi Kannamma : "ஒரு DNA டெஸ்ட் எடுக்க 10 வருஷமா?".. RESULT -க்கு முன் பாரதியை கழுவி ஊற்றிய டாக்டர்.!