தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினர்.
Also Read | "நான் அவங்க Control-ல தான்".. BB ஜோடியில் ஆடி முடிச்சதும் பாவனி பற்றி அமீர் வைரல் பேச்சு..
தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3 வருடத்துக்கு பின் அண்மையில் எண்ணப்பட்டண. இதில், தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகினர்.
இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதேபோல நடிகர் கமல்ஹாசனையும் அவர்கள் சந்தித்து பேசினர்.
நடிகர் ரஜினி கோரிக்கை
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்,"தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை நீக்கிவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்ற பெயரை வைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர்கள் நாசர், கார்த்தி மற்றும் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் நடிகர் ரஜினியின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றவேண்டும் என நடிகர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் ரஜினியை சந்தித்திருப்பது குறித்து பலரும் பரபரப்பாக பேசிவருகின்றனர்.
கடந்த மார்ச் மாத இறுதியில் செய்தியாளர்களை சந்தித்திருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முழுவீச்சில் தொடங்கப்படும் என்றும் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடித்தவுடன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஆம்பர் ஹெர்ட்க்கு எதிரான வழக்கில் வெற்றிபெற்ற ஜானி டெப் உருக்கமான பதிவு..!