சென்னை: நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த முடிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.
விவாகரத்து குறித்து தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில், "18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்". என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தங்கையான சௌந்தர்யா டிவிட்டரில் தனது முகப்பு படத்தை மாற்றியுள்ளார். இந்த முகப்பு படம், சிறுவயது ஐஸ்வர்யா, சௌந்தர்யா தங்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படமாக இது அமைந்துள்ளது. "வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம். தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்" என்பது போல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்களின் கருத்துக்கள் இவை:
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022