www.garudavega.com

VIDUTHALAI : சூரியை தானே பார்த்தோம்.. இந்த SCENE-ல VJS இருக்காரா.? வைரல் ஆகும் விடுதலை பட ஸ்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

Soori Vijay Sethupathi Viral scene in theatre Viduthalai Part 1

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

Soori Vijay Sethupathi Viral scene in theatre Viduthalai Part 1

இப்படத்தின் முதல் பாதியில் பெரும்பாலும் விஜய் சேதுபதி ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வருவார். ஒரு கட்டத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியின் போர்ஷன்கள் பிளாஷ்பேக்காக சில காட்சிகளில் காண்பிக்கப்படும். விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு பெரிதாக நகரும் என்று தெரிகிறது.

Soori Vijay Sethupathi Viral scene in theatre Viduthalai Part 1

இந்நிலையில் முதல் பாகத்தில் சூரி - பவானி ஸ்ரீ சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளின் ஓரிடத்தில் திரையரங்கில் படம் பார்க்கக் கூடிய காட்சிகள் இடம் பெறும். அதில் பலரும் சூரி &  பவானி ஸ்ரீ ஆகியோரை மட்டுமே பார்த்திருப்பார்கள். ஆனால் அதே காட்சியில் விஜய் சேதுபதி இவர்களுக்கு பின்னால் அமர்ந்திருக்க கூடிய குறிப்பிட்ட ஸ்கிரீன்ஷாட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த காட்சிக்கு பின்னணியில் விஜய் சேதுபதி அமர்ந்திருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? அல்லது எதேச்சையாக அந்த காட்சியில் அவரும் அந்த திரைப்படத்தை பார்க்க வந்திருக்கிறாரா? என்பது குறித்த கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் பதில் தெரியலாம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Soori Vijay Sethupathi Viral scene in theatre Viduthalai Part 1

People looking for online information on Soori, Viduthalai, Viduthalai Part 1, Vijay Sethupathi will find this news story useful.