சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘தலைவர் 168’ படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், நடிகர் சூரி நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படமான ‘தலைவர் 168’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தினை ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்துடன் சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைத்துள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காமெடி நடிகர் சூரி இணைந்து நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், இது குறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கனவு நிறைவேறியது. நன்றி’ என ட்வீட் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “அவரோட செல்ஃபி எடுத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.. ஆனா இப்போ அவரோட சேர்ந்து நடிக்கிறது சந்தோசத்தோட உச்சத்துல இருக்கேன். நன்றி. அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் பேனரில் ரெண்டு படம் நடிக்கிறதில் மகிழ்ச்சி. சிவா சாரோட இரண்டாவது படம். மாஸ் இயக்குநர் அவர். இந்த தெறி மாஸ் கூட்டணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி” என கூறியுள்ளார்.
Hear what @sooriofficial has to say about acting with Superstar @rajinikanth for the first time, in #Thalaivar168@directorsiva pic.twitter.com/GVwBTJbup2
— Sun Pictures (@sunpictures) November 29, 2019