நடிகர் சூரி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரபல மலையாள நடிகை இணைந்துள்ளார்.
Also Read | மத்திய அரசின் பெருமைமிகு தேசிய விருதை பெற்ற நடிகை ஸ்ருதிஹாசன்.. முழு விவரம்!
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேதாளம், அண்ணாத்த, டான், சீமராஜா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடுதலை படம் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூரி, கூழாங்கல் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடிக்க உள்ளார். கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கபேலா, காப்பா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் தான் அன்னா பென்.
Also Read | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த தமன்னா.. போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!