நடிகர் சூரி நடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படத்தினை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | Varisu : அட.. ஆமால்ல 😍 ஆறு வருசத்துக்கு பிறகு தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். "டான்" படத்துக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது.
ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.
இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பல படங்களை தயாரித்துள்ளார். கனா, வாழ், டாக்டர், டான் ஆகிய படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படத்தினை 'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | துணிஞ்சா வெற்றி நமதே.. 'துணிவு' படத்தின் HD ஸ்டில்கள்.. கொலமாஸ் லுக்கில் நடிகர் அஜித்!