கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் உருவாக உள்ளது.
Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ஐஸ்வர்யா.. செம்ம வைரல் வீடியோ
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சாதனை படைத்தது. IMDB தரவரிசையில் 'தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்' மற்றும் 'தி காட்பாதர்' படங்களுக்கு அடுத்து 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை சூரரைப் போற்று பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூரரைப் போற்று படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் தமிழ் மொழியில் நடித்த அபர்னா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். இவர் பிரபல இந்தி சீரியல் நடிகை ஆவார். கலர்ஸ் டிவியின் காதல் மெகா சீரியலான மேரி ஆஷிகி தும் சே ஹியில் இஷானி வகேலாவாக நடித்ததற்காக புகழ்பெற்றவர். 2018 ஆம் ஆண்டு விஷால் பரத்வாஜின் படகா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இர்ஃபான் கான் மற்றும் ஷிதாத் ஆகியோருடன் ஆங்கிரேஸி மீடியம் (2020) படத்தில் ராதிகா கதாநாயகியாக நடித்தார். தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8