பிக் பாஸில் நான்?- சொல்வதெல்லாம் உண்மை பிரபலம் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடன கலைஞரும், நடிகையுமான சுதா சந்திரன் தனது வாழ்வில் சந்தித்த கொடூரமான விபத்து குறித்தும், ஒரு டான்ஸராக வெற்றி பெற்றது குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.

Solvathellam Unmai star Sudha Chandran clarifies she is not going to Bigg Boss 3

கடந்த 1981ல் கார் விபத்தில் தனது வலது காலை இழந்த பின், ஜெய்ப்பூர் ஃபீட்ஸ் பொருத்திக் கொண்டு மீண்டும் ஒரு நடன கலைஞராக தனது கனவை தொடர்ந்தவர் சுதா சந்திரன். தனது சொந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ‘மயூரி’ எனும் ஆட்டோ பயோகிராபி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், Behindwoods தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் தனக்கு நேர்ந்த கொடூரமான கார் விபத்து குறித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும், தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை சில மாதங்கள் தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்தும் பேசினார்.

அப்போது பேசிய சுதா, ‘டான்ஸ் ஷோ, டிவி சீரியல், திரைப்படங்கள் என்று இருந்தபோது, ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற ஒரு நிகழ்ச்சி வித்தியாசமாக இருந்தது. அங்கு பல சுவாரஸ்யமான, மோசமான, கவலையான விஷயங்கள் நடக்கும். நவரசம் என்றால் என்ன என்பதை அங்கு தான் தெரிந்துக் கொண்டேன்’ என்றார்.

மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 3’ சீசனில் பங்கேற்பதாக பரவும் வதந்திக்கு நடிகை சுதா சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. பங்கேற்கும் எண்ணமும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்’ என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸில் நான்?- சொல்வதெல்லாம் உண்மை பிரபலம் விளக்கம் வீடியோ

Solvathellam Unmai star Sudha Chandran clarifies she is not going to Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Solvathellam Unmai, Sudha Chandran will find this news story useful.