பிக்பாஸ் வீட்டில் தற்போது மணிக்கூண்டு டாஸ்க் நிகழ்ந்து வருகிறது. மொத்தம் 5 அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து இருப்பதால் இந்தமுறை யார் இந்த டாஸ்க்கை வெல்ல போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் அதிகமாக இருக்கிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் ரியோ தன்னுடைய மனைவி ஸ்ருதிக்கு ஹார்ட் சிம்பலை வரைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று ரியோ பிஸியாக டாஸ்க்கில் ஈடுபட்டிருந்த போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவரது மனைவி பேசும் வீடியோவை அகம் டிவியில் பிக்பாஸ் ஒளிபரப்பினார். இதைப்பார்த்த அர்ச்சனா உள்ளிட்டோர் ரியோவை வேகமாக வரும்படி சைகை காட்டி அழைத்தனர். அவர் வந்தபோது ஸ்ருதி பேசிய வீடியோ பாதிக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது.
ரியோ டாஸ்க்குல வெளிய இருக்கும் போது அவனுக்கான வீடியோவ ஒளிபரப்புறார் பிக்பாஸ்.... முதல்ல அவர எவிக்ட் பண்ணனும்.... #BiggBossTamil4
— நிலாவன் (@nilaavan) November 18, 2020
மகளை மடியில் வைத்துக்கொண்டு பேசிய ஸ்ருதி, '' நீ என் பர்த்டேக்கு பண்ண வீடியோ பார்த்தேன் ரொம்ப க்யூட்டா இருந்தது. என்ன நடந்தாலும் பாஸிட்டிவா சிரிச்சிட்டே இரு. அதுவே எங்களுக்கு போதும்,'' என உருக்கமாக பேசினார். மகளை மடியில் வைத்துக்கொண்டு மனைவி பேசியதை பார்த்த ரியோ கண்கலங்க சோம், அர்ச்சனா, நிஷா, ரமேஷ் என அனைவரும் அவரை கட்டியணைத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.