www.garudavega.com

"எப்போதும் ஸ்மைல் பண்ணுங்க".. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் நடிகை அனுஷ்காவின் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை அனுஷ்கா.  தமிழில் அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் முறையே கார்த்தி, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். மேலும் தனித்துவமான பெண் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகமதி உள்ளிட்ட பெரும் படங்களிலும் நடித்திருந்தார்.

smile always Actress anushka shetty post becomes viral

இந்த படங்கள் தெலுங்கில் உருவானாலும் பலமொழிகளிலும் வரவேற்பைப் பெற்றன. இவை அனைத்தையும் தாண்டி ஒரு மகுடமாக பாகுபலி திரைப்படம் அனுஷ்காவுக்கு அமைந்தது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபாட்டி, ரம்யாகிருஷ்ணன், நாசர், தமன்னா மற்றும் பலர் நடித்து வெளியான இப்படத்தில் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா. தேவசேனா எனும் வீரம் மிகுந்த அவரது கேரக்டரை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக கதை பயணிக்கும் என்றாலும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவின் காட்சிகள் மாஸ் காட்டினர்.

இப்படி பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை அனுஷ்காவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் அண்மையில் காதலர் தினத்தன்று தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நடிகை அனுஷ்கா, “அன்பின் அனைத்து வடிவங்களுக்கும் அதன் மிகச்சிறிய வெவ்வேறு வழிகளில், உங்கள் இதயத்தை அரவணைப்பவர்கள், உங்கள் வழிகளை மாற்றுபவர்கள் .. உங்கள் சுயத்தின் மீது உங்களைக் காதலிக்க வைப்பவர்கள், உங்கள் சுயத்தை மீறி உங்களை நேசிக்க வைப்பவர்கள் ... நாம் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் அப்பாற்பட்டவர்களுக்கு …!

smile always Actress anushka shetty post becomes viral

நமக்கே உரிய தனித்துவமான வழியில் கொடுக்கவும் பெறவும் நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவோம் ... மேலும் இந்த தருணத்தில் நாம் இருக்கும் இடத்திற்கு அன்பாகவும் நிறைவாகவும் உணருவோம் ..  தினமும் ஹேப்பி ஹேப்பி Day🤗 என்றென்றும் அன்பு செலுத்தும் அனைவருக்கும் நன்றி... ❤️ நேசியுங்கள், மன்னியுங்கள் எப்போதும் ஸ்மைல் பண்ணுங்க..😊 #ValentinesDay” என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Smile always Actress anushka shetty post becomes viral

People looking for online information on Anushka Shetty, Anushka Shetty Smile will find this news story useful.